பொங்கல் அவியல் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!

Summary: வெண்பொங்கலுக்கு சரியான தொடுக்கறி என்றால் அது இந்த அவியல் தான். பலவகை காய்கறிகளைக்கொண்டு இந்த அவியல் செய்யப்படுகிறது.சுவையும், சத்துக்களும் கொண்ட இந்த அவியல் 21 வகை காய்கறிகள் கொண்டு செய்யப்படவேண்டும் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். நம்மால் முடித்த காய்கறிகளைக் கொண்டு இந்த அவியலை செய்து இந்த பொங்கலை கொண்டாடுங்கள்.இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • துண்டுகளாக நறுக்கிய முருங்கைக்காய், வாழைக்காய், சேனைக்கிழங்கு, கேரட், பூசணிக்காய், அவரைக்காய், உருளைக்கிழங்கு, மாங்காய், கொத்தவரங்காய், மற்றும் மொச்சை.
  • 6 பச்சைமிளகாய்
  • 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • 1 கப் கெட்டித்தயிர்
  • ½ மூடி தேங்காய் துருவல்
  • 2 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி

Steps:

  1. முதலில் தேங்காய் துருவல், பச்சைமிளகாய், சோம்பு, சீரகம், சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
  2. பிறகு காய்கறிகளை தண்ணீரால் அலசி வாணலில் குறைவான தீயில், வேகவிடவும். நன்றாக வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கிளறி கொதிப்பதற்கு முன்னால் இறக்கவும்.
  3. இதில் லேசாக தேங்காய் எண்ணெய், அடித்த தயிரை ஊற்றிகிளறவும்.
  4. அடுத்து வேறு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து அவியலில் ஊற்றி, லேசாக கொத்தமல்லி இலை கலந்துகொள்ளவும்.