காளான் தொக்கு இப்படி செய்து பாருங்க!

Summary: நீங்கள் சைவ பிரியர்களா? அப்படியெனில் காளானை சமைத்து சாப்பிடுங்கள். அதுவும் சப்பாத்திக்கு சைடு டிஷ்ஹாக சமைத்து சாப்பிட்டு பாருங்க அதன் ருசிக்கு ஈடே இருக்காது அவ்வளவு சுவையாக இருக்கும்.உங்களுக்கு எளிய முறையில் காளான் தொக்கு செய்ய தெரியுமா? இல்லையெனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் சமைத்து ருசித்திடுகள்.இந்த காளான் தொக்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதனுடன் சப்பாத்தி மட்டும் இல்லாமல் சாதத்துக்கு மற்றும் தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள அற்புதமாக இருக்கும். ஒரு முறை செய்து பாருங்க எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

Ingredients:

  • ¼ கிலோ காளான்
  • 2 வெங்காயம்
  • 1 தக்காளி
  • உப்பு
  • 2 டீஸ்பூன் தனியா
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 காய்ந்த மிளகாய்
  • 1 பல் பூண்டு
  • எண்ணெய்
  • 1 சிறியது பட்டை
  • 1 லவங்கம்
  • 2 டேபிள் ஸ்பூன் தனியா
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகு
  • 2 டேபிள் ஸ்பூன் சீரகம்
  • 2 டேபிள் ஸ்பூன் சோம்பு
  • 1 காய்ந்த மிளகாய்
  • 1 பல் பூண்டு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் காளானை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், மற்றும், தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. அடுத்து வறுக்க வேண்டிய பொருட்களை ஒரு கடாயில் போட்டு எண்ணெய் ஊற்றாமல் வறுக்கவும்.
  3. வறுத்த பொருட்களை ஆறியவுடன் மிக்சியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  4. மிகவும் நைசாக இல்லாமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, லவங்கம், போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  5. அதனுடன் காளானை போட்டு தண்ணீர் விடாமல் நன்கு வேகவிடவும்.
  6. காளான் வெந்தவுடன் வறுத்து அரைத்த கலவையை போட்டு மூன்று நிமிடம் வேக விட்டு இறக்கவும்.
  7. இப்பொழுது சுவையான காளான் தொக்கு தயார்.