வெஜிடபிள் கோஸ்மல்லி இது போன்று ஒரு முறை செய்து பாருங்க!

Summary: இது போன்று விருப்பமான காய்கறிகளை சேர்த்து வெங்காயம், தக்காளி, பச்சை சோளம், போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவதால் உடலுக்கு சத்துக்கள் அப்படியே கிடைக்கும்.இந்த வெஜிடபிள் கோஸ்மல்லி காலையில் சாப்பிடலாம், குழந்தைகளுக்கும் கொடுக்கலாம் அனைவரும் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.வீட்டில் உள்ள காய்கறிகளை வைத்து காலை உணவை ஹெல்தியாக சாப்பிடலாம். இது போன்று நீங்களும் சாப்பிட்டு பாருங்க.இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க.

Ingredients:

  • 100 கிராம் பாசிப்பருப்பு
  • 1 கப் கோஸ்
  • 1 கப் கேரட்
  • 1 கப் வெள்ளரிக்காய்
  • 1 தக்காளி
  • எலுமிச்சை பழம்
  • கொத்தமல்லித்தழை
  • உப்பு

Steps:

  1. முதலில் பாசிப்பருப்பை ½ மணிநேரம் ஊறவைக்கவேண்டும். நீரை வடித்து எடுத்துக்கொள்ளவும்.
  2. பருப்புடன் துருவிய கேரட், கோஸ், நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, உப்பு, எல்லாவற்றையும் சேர்த்து, எலுமிச்சை பழம் பிழிந்து, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலக்கவும்.
  3. இதே முறையில் முளைகட்டிய பயிறு வகைகளையும் தயாரித்து சாப்பிடலாம்.
  4. விருப்பமான காய்கறிகளை சேர்த்து வெங்காயம், தக்காளி, பச்சை சோளம், பச்சையாக சாப்பிடுவதால் அணைத்து சத்துக்களும் உடலுக்கு அப்படியே கிடைக்கும்.