பேப்பர் போன்று கம்பு தோசை செய்வது எப்படி ?

Summary: கம்பை எப்படி நமக்கு ஏற்ற உணவாக செய்து சாப்பிடலாம் என்றால் பல வகைகளில் சோசை செய்யும் நாம் கம்பு தோசை செய்து சாப்பிடலாம். இது மிகவும் அனைவரது வீட்டிலும் எளிய முறையில் செய்து விடலாம். காலை இரவு நாம் டிபன் செய்து சாப்பிடும் பொழுது கம்பு மாவை பயன்படுத்தி தோசை செய்து சாப்பிட்டு கொள்ளலாம் இது நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இன்று இவ்வளவு மகத்துவம் வாய்ந்த கம்பு வைத்து எப்படி கம்பு தோசை செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 2 கப் கம்பு மாவு
  • 1 கப் புளித்த தோசை மாவு
  • 3 பெரிய வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • 2 tbsp சீரகம்
  • எண்ணெய்
  • உப்பு
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 மாவு கலக்கும் பாத்திரம்

Steps:

  1. முதலில் கம்பு தோசை செய்வதற்காக மாவு தயார் செய்து கொள்வோம். நாம் வைத்திருக்கும் வெங்காயம், கொத்த மல்லி, பச்சை மிளகாய், கருவேப்பிலை நான்கையும் சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளுங்கள்.
  2. பின்பு ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, நாம் வெட்டி வைத்திருக்கும் வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை, பச்சை மிளகாய், இதனுடன் சீரகம் சேர்த்து தண்ணீர் விட்டு கலக்கவும்.
  3. பின்பு இதனுடன் புளித்த தோசை மாவையும் சேர்த்துக் கொள்ளவும். தயார் செய்த கம்பு மாவு நீர்க்க இருக்கும் படி நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
  4. இந்த மாவை அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை நன்றாக ஊற விடுங்கள் பின் மாவு தயாராகிய பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள்.
  5. மாவை கல்லில் ஊற்றும் போது தோசை கல்லின் ஓரத்தில் ஊற்ற ஆரம்பித்து நடுப்பகுதியில் மாவு ஊற்றி முடிக்க வேண்டும் ஆம், ஒரு வட்டம் போட்டு அதற்குள் தோசை மாவை ஊற்றி நிரப்பிக் கொள்ளுங்கள்.
  6. பின்பு தோசைக்கு எப்பொழுதும் எண்ணெய் ஊற்றுவது போல சிறிது எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள் தோசை பொன்னிறமாக வந்தவுடன் திருப்பி போட்டுக் கொள்ளுங்கள் இரு பக்கமாகவும் தோசை பொன்னிறமாக வந்துவிட்டால் அவ்வளவுதான் சுவையான கம்பு தோசை இனிதே தயாராகி விட்டது.