சுவையான செட்டி நாடு மட்டன் கறி இப்படி செய்து பாருங்க!

Summary: நீங்கள் அசைவ பிரியர்களா அப்போ உங்களுக்காகவே இந்த ரெசிபி. மட்டன் குழம்பு வகைகளிலே மிகவும் சுவையாக இருப்பதென்றால் அது செட்டிநாடு மட்டன் குழம்பு தான். இந்த குழம்பை பாத்தாலே அனைவர்க்கும் பசி வந்துவிடும். ஏனென்றால் இந்த மனதிற்கு ஈடு வேறு எதிலும் இல்லை.இந்த செட்டிநாடு குழம்பை பலரும் கடைகளில் தான் சாப்பிட்ருப்பாக, ஆனால் வீட்டில் எப்படி செய்வதென்று தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.இந்த மட்டன் கறி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் சமைத்து அசத்துங்கள். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

Ingredients:

  • 1 கிலோ மட்டன்
  • 1 துண்டு இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • 100 கிராம் சின்ன வெங்காயம்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 பட்டை
  • 2 கிராம்பு
  • ¼ டேபிள் ஸ்பூன் மிளகு
  • ½ டீஸ்பூன் கடுகு
  • ½ டீஸ்பூன் சோம்பு
  • ½ டீஸ்பூன் சீரகம்
  • 2 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 2 ஸ்பூன் மல்லித்தூள்

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் மட்டனை கழுவி, நடுத்தரமான துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  2. பிறகு பாதி சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, சீரகம், சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு, மல்லி, மிளகாய் தூள் அனைத்தையும் மிக்சியில் சேர்த்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  3. பின்பு அரைத்த மசாலாவை மட்டன் துண்டுகள் மீது தடவி, 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  4. அடுத்து குக்கரில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், மசாலா தடவி ஊறவைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து 4 விசில் வரும் வரை வேக விடவும்.
  5. பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடித்ததும், கருவேப்பிலை, மீதி வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  6. பின் தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும். பிறகு வேக வைத்துள்ள மட்டன் துண்டுகளை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
  7. இப்பொழுது சுவையான செட்டிநாடு மட்டன் கறி தயார்.