சூப்பரான கொத்துக்கறி புலாவ் இப்படி ஒரு முறை செய்து பாருங்க!

Summary: சிறிய உணவகங்கள் ஆக இருந்தாலும் சரி பெரிய உணவககங்கள் ஆக இருந்தாலும் சரி கொத்துக்கறி இல்லாத அசைவ உணவகத்தை கிராமப்புறங்களில் காணவே முடியாது.அதுபோன்று மட்டன் கொத்துக்கறி புலாவ் செய்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த ரெசிபியை சுலபமாகவும், குறைந்த நேரத்திலும், சுவையாகவும் செய்து விடலாம்.இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க வீட்டில் உள்ள எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

Ingredients:

  • ½ கிலோ கொத்துக்கறி கறி
  • 2 கப் சாதம்
  • 1 வெங்காயம்
  • 1 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது
  • 4 பச்சை மிளகாய்
  • ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • 1 பிரிஞ்சி இலை
  • 1 பட்டை

Steps:

  1. முதலில் குக்கரில் கொத்துக்கறியை போட்டு அதனுடன் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள், மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  2. பிறகு சாதத்தை சிறிது உப்பு போட்டு உதிரியாக வடித்துக்கொள்ளவும்.
  3. பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை போட்டு தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம், போட்டு வதக்கவும். அதனுடன் நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய புதினா இலைகளை சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும்.
  4. பின்னர் அதனுடன் வேகவைத்த கொத்துக்கறியை சேர்த்து உப்பு தேவைப்பட்டால் போட்டு தண்ணீர் சுண்டும் வரை கிளறவும்.
  5. கொத்துக்கறி கலவையுடன் உதிராக வடித்த சாதத்தை சேர்த்து அதனுடன் அதனுடன் சிறிது மிளகாய் தூள், சேர்த்து கிளறி இறக்கவும்.
  6. இப்பொழுது சுவையான கொத்துக்கறி புலாவ் தயார்.