சுவையான கார்லிக் சிக்கன் இப்படி செய்து பாருங்க!

Summary: உடல் எடையை குறைக்க டயட்டில் இருப்போர். தாங்கள் உண்ணும் உணவில் புரோட்டீன்களை அதிகம் சேர்த்து கொள்ளவேண்டும். அதிகம் ப்ரோட்டீன் உள்ள உணவு சிக்கன் தான். இத்தகைய சிக்கனுடன் பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிட்டால், அது சுவையுடன் இருப்பதோடு, உடல் எடை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும்.அந்த வகையில் இது போன்று கார்லிக் சிக்கன் செய்து சாப்பிட்டு பாருங்க வித்தியாசமான சுவையிலும், அட்டகாசமான சுவையிலும் இருக்கக்கூடும். வீட்டில் உள்ள எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க.

Ingredients:

  • 1 கிலோ சிக்கன்
  • 100 கிராம் வெண்ணெய்
  • 2 பெரிய பூண்டு
  • 1 ஸ்பூன் கரம் மசாலா
  • 1 ஸ்பூன் மிளகுத்தூள்
  • 50 கிராம் உருளைக்கிழங்கு சிப்ஸ்
  • 50 கிராம் சோளமாவு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.
  2. பிறகு பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். இதில் வெண்ணையை சமமாக தடவவும்.
  3. பின் நறுக்கிய பூண்டு, கரம் மசாலா, மிளகுத்தூள் இவற்றை சிக்கனுடன் கலந்து கொள்ளவும். 10 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
  4. ஒரு பௌலில் உருளைக்கிழங்கு சிப்ஸ்சை நொறுக்கி சேர்க்கவும், மற்றொரு பௌலில் சோளமாவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளவும்.
  5. கலந்து வைத்த சிக்கன் துண்டுகளை ஒவொன்றாக சோளமாவில் நினைத்து உருளைக்கிழங்கு சிப்ஸில் போட்டு எடுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  6. பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் தயார் பண்ண சிக்கன் துண்டுகளை போட்டு எடுக்கவும்.