ஹோட்டல் சுவையில் பருப்பு இப்படி செய்து பாருங்க!

Summary: ஹோட்டல் ஸ்டைல் பருப்பு பொடி இப்படி செய்து இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் நெய் அல்லது நல்லெண்ணெயில் கலந்து சாப்பிட்டால் ஐயோ அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதுமட்டும் அல்லாமல் உங்கள் உறவினர்கள் வெளியூர்களில் இருந்தால் விடுமுறை நாட்களுக்கு வரும் போது இந்த பருப்பு பொடியை அரைத்து கொடுத்து விடுங்கள் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க.இந்த பருப்பு பொடியை சுலபமாகவும், குறைந்த நேரத்திலும் செய்து விடலாம். ஒரு முறை அரைத்தால் போதும் 2 மாதங்கள் வரை கெடாமல் அப்படியே இருக்கும்.இந்த பருப்பு பொடியை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் அரைத்து ருசித்திடுகள்.

Ingredients:

  • ½ கப் துவரம் பருப்பு
  • ½ கப் கடலை பருப்பு
  • ½ கப் பாசிப்பருப்பு
  • ¼ கப் உளுத்தப்பருப்பு
  • ½ கப் பொட்டுக்கடலை
  • ½ ஸ்பூன் சீரகம்
  • 10 to 15 காய்ந்த மிளகாய்
  • கருவேப்பிலை
  • ¼ ஸ்பூன் நெய்
  • 10 பல் பூண்டு
  • ¼ ஸ்பூன் உப்பு
  • 1 ஸ்பூன் பெருங்காயப்பொடி

Equipemnts:

  • 1 கடாய்
  • மிக்ஸி

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்துமிதமான தீயில் எண்ணெய் ஊற்றாமல் துவரம் பருப்பை சேர்த்து நன்கு சிவக்க வறுக்கவும். பருப்பு சிவந்ததும் தனியாக எடுத்துவைக்கவும்.
  2. அடுத்து அதே கடாயில் கடலை பருப்பு சேர்த்து நன்கு சிவக்க வருது தனியாக எடுத்து வைக்கவும்.
  3. அடுத்து பாசிப்பருப்பையும் சிவக்க வருது தனியாக எடுத்துவைக்கவும்.
  4. அடுத்து உளுத்தம் பருப்பு சேர்த்து அதே போல் நன்கு வறுத்து நிறம் மாறியதும் அதனை தனியாக எடுத்து வைக்கவும்.
  5. அடுத்து பொட்டுக்கடலை சேர்த்து கொஞ்சம் வறுத்து அதனையும் தனியாக எடுத்து வைக்கவும்.
  6. அதே போல் வரமிளகாய் சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  7. பிறகு கறிவேப்பிலை சேர்த்து நொறுங்கும் பதத்திற்கு நன்கு வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  8. பிறகு அதே கடாயில் நெய் விட்டு பூண்டு சேர்த்து சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  9. கடைசியாக உப்பு, பெருங்காய பொடி சேர்த்து லைட்டாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  10. இப்பொழுது வறுத்த பொருட்களையும் நன்கு ஆற விட்டு மிக்சியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  11. இப்பொழுது ருசியான பருப்பு பொடி தயார்.