பன் போன்று மிருதுவாக கரண்டி ஆம்லெட் செய்வது எப்படி ?

Summary: முட்டையில் இருக்கும் லூட்டின் என்ற பொருள் நம் கண்களுக்கு வலு சேர்ப்பதற்கு உதவியாக இருக்கும். மேலும் முட்டையில் உள்ள செலினியம் என்ற பொருள் நமது உடம்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகரிக்கும் மேலும் மீன்களில் காணப்படும் ஒமேகா 3 என்ற பொருள்ளும் முட்டையில் இருப்பதால் இதய நோய் வராமல் தடுக்கும் இவ்வளவு சத்து நிறைந்த முட்டையில் பன் போன்ற கரண்டி ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்.

Ingredients:

  • 2  முட்டை
  • 15 சின்ன வெங்காயம்
  • 5 பச்சை மிளகாய்
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • ½ tbsp மிளகாய் தூள்
  • 1 tbsp மிளகு தூள்
  • எண்ணெய்
  • உப்பு
  • கொத்த மல்லி

Equipemnts:

  • 1 சிறிய கடாய்
  • 1 பவுள்
  • 1 பெரிய அளவு குழி கரண்டி

Steps:

  1. முதலில் சின்ன வெங்காயத்தை எடுத்து பொடி கொடியாக நறுக்கி கொள்ளுங்கள். பின் பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சிறிது எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
  2. பின் சிறிய கடாயை ஒன்றை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
  3. வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் மஞ்சள் பொடி, மிளகு பொடி, மிளகாய் பொடி மூன்றையும் போட்டு நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
  4. பின்பு கரண்டியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளுங்கள். அதன் பின் இரண்டு முட்டையை ஒரு பவுளில் உடைத்து ஊற்றி அதனுடன் வத வைத்திருக்கும் வெங்காயங்களை போட்டு நன்றாக கலக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
  5. அதனுடன் சிறிதளவு உப்பு போட்டு நன்றாக அடியுங்கள். பின்பு கரண்டி சூடாகியவுடன் கரண்டி பிடிக்கும் அளவிற்கு உள்ளே முட்டையை ஊற்றி விடுங்கள்.
  6. முட்டை ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு மறுபக்கமும் வேகவிட்டுக் கொள்ளுங்கள் இப்படியாக மீதம் இருக்கும் முட்டையும் ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான கரண்டி ஆம்லெட் தயாராகிவிட்டது.