காரசாரமான மட்டன் நெஞ்சு எலும்பு சூப் இப்படி செய்து பாருங்க!

Summary: மட்டன் நெஞ்சு எலும்பு சூப் இந்திய முழுவதும் பிரபலமான ஒன்று இந்த சூப், இதற்கு தென்னிந்தியாவில் தனி மவுசும் உண்டு. சிறியவர்கள், முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த சூப்பின் ஸ்பெஷல் என்னவென்றால் நெஞ்சு எலும்பு கறியை நன்கு சுத்தம் செய்து விட்டால் போதும் இந்த ரெசிபியை எளிதாக செய்து விடலாம்.சளி, இருமல் தொல்லைகளுக்கு இந்த சூப் ஒன்றுதான் நல்ல இதமாக இருக்கும் அதுமட்டும் அல்லாமல் மழைக்காலங்களில் சூப் குடிப்பதே ஒரு தனி சுகம். ஏனென்றால் அவ்வளவு இதமாக இருக்கும்.இனி கடைகளில் போய் வாங்காமல் வீட்டிலே சுலபமாக சூப்பை செய்துவிடலாம். வீட்டில் உள்ள எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு சாதத்தில் சேர்த்தும் கொடுக்கலாம்.

Ingredients:

  • ½ கிலோ நெஞ்செழும்பு
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • சீரகம், மிளகு
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி
  • உப்பு
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 2 பச்சைமிளகாய்
  • மஞ்சள் தூள்
  • இஞ்சி
  • பெருஞ்சீசகம்
  • கறிவேப்பிலை

Steps:

  1. முதலில் மட்டன் நெஞ்செலும்பை நன்றாக கழுவி கொள்ளவேண்டும். வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளியை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். கொத்தமல்லி இழையை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. பிறகு இஞ்சி, பெருஞ்சீரகம், ஒன்று பாதியாக தட்டி வைக்கவும்.
  3. ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மிளகு, சீரகம் போட்டு தாளிக்கவும். பின் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. தக்காளி வெங்காயம் நன்றாக வதங்கியதும் மட்டன் நெஞ்சு எலும்பை போட்டு 5 நிமிடம் வதக்கவும். பின்னர் உப்பு, மஞ்சள் தூள், போட்டு 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி 6 விசில் விட்டு மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.
  5. பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, தட்டி வைத்துள்ள இஞ்சி, பெருஞ்சீரகம், போட்டு தாளித்து சூப்பில் கொட்டி 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கவும்.
  6. இப்பொழுது சுவையான மட்டன் நெஞ்செலும்பு சூப் தயார்.