ருசியான மாங்காய் சாதம் இப்படி செய்து பாருங்க!

Summary: மாங்காய் சாதம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று தான் மாங்காய். தற்போது அனைவருமே வேளைக்கு செல்வதால், பெரும்பாலானோர் டிபன் செய்து சாப்பிடுவதை விட, கலவை சாதம் செய்து சாப்பிடத்தான் விரும்புகின்றனர். இதற்கு காரணம் வேளைக்கு செல்வதில் தாமதம் ஆகிவிடும் என்பதால் தான் டிபன் சாப்பிடுவதை நிறுத்துகிறார்கள். அந்தவகையில் இப்பொழுது மாங்காய் சீசன் என்பதால் மாங்காய் விலை மலிவாக கிடைக்கும். எனவே அதர்க்கேற்ற மாங்காயை வைத்து எளிதான முறையில் மாங்காய் சாதம் எப்படி செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம்.இந்த மாங்காய் சாதம் அனைவர்க்கும், குறிப்பாக குழந்தைகளுக்கு பிடித்தவாறு இருக்கும். நீங்களும் ஒரு முறை செய்து பாருங்க.

Ingredients:

  • 1 கப் வேகவைத்த சாதம்
  • 1 நடுத்தர மாங்காய்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் வெந்தயத்தூள்
  • ½ டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • ½ டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • உப்பு
  • 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  • ½ டேபிள் ஸ்பூன் கடுகு
  • 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  • சிறிது கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் மாங்காய் நன்கு கழுவி தோல் சீவி துருவிக்கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு கப் சத்தத்திற்கு ¾ கப் மாங்காய் துருவல் தேவைப்படும். புளிப்பு தன்மைக்குக்கேற்ப பயன்படுத்தவும்.
  3. வேகவைத்த சாதத்தை சிறிது நேரம் ஆற விடவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு சேர்த்து வெடித்தவுடன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
  5. கடலைப்பருப்பு பொன்னிறமானதும் கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், வெந்தயத்தூள், ½ டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். சாதத்தில் உப்பு இருப்பதால் உங்களுக்கு தேவைக்கேற்ப போட்டுக்கொள்ளவும்.
  6. பிறகு துருவி வைத்துள்ள மாங்காய் துருவலலை எடுத்து பொடி வகைகளோடு சேர்த்து மாங்காய் முக்கால் பாகம் வேகும் வரை நன்கு கிளறவும். நாகு வெந்து விட்டால் குழைந்து விடும்.
  7. அடுத்து மாங்காய் துருவல் முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் ஆறவைத்திருக்கும் சாதத்தில் கலந்து எல்லா இடங்களிலும் படுமாறு ஒரு கரண்டியால் கிளறி விடவும்.
  8. இப்பொழுது ருசியான மாங்காய் சாதம் தயார்.