சுட சுட நாட்டுக்கோழி பிரியாணி இனி இப்படி செய்யுங்க!

Summary: அசைவ பிரியர்களுக்கு கோழிக்கறி பிடித்தமான ஒன்று, அதுவும் நாட்டுக்கோழி என்றால் பலருக்கு மிகவும் பிடிக்கும். நாட்டுக்கோழி சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.அதனால் இன்று நாம் வீட்டிலேயே நாட்டுக்கோழியில் சுவையான பிரியாணி எப்படி செய்வது என்று தான் பார்க்கப்போகிறோம்.

Ingredients:

  • 600 கிராம் பாசுமதி அரிசி
  • ½ கிலோ நாட்டுக்கோழிகறி
  • 4 பெரிய வெங்காயம்
  • எண்ணெய்
  • 4 தக்காளி
  • 5 தலா ஏலக்காய், பட்டை, கிராம்
  • 8 பச்சைமிளகாய்
  • 1 ஸ்பூன் எலுமிச்சைச்சாறு
  • 3 ஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட்
  • 4 டேபிள் ஸ்பூன் தயிர்
  • நெய்
  • முந்திரி பருப்பு
  • 2 ஸ்பூன் டால்டா
  • புதினா, கொத்தமல்லி
  • உப்பு

Equipemnts:

  • 1 பெரிய பாத்திரம்

Steps:

  1. முதலில் நாட்டுகோழிக்கறியை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.
  2. அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
  3. பிறகு தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய் போன்றவற்றை நீல வாக்கில் அறிந்துகொள்ளவும்.
  4. அடுத்து ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய், டால்டா, சேர்த்து பட்டை, ஏலக்காய், கிராம்பு, முந்திரி பருப்பு, சேர்த்து வதக்கவும்.
  5. பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  6. பிறகு அதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். அடுத்து தயிர், புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறவும். பின் சுத்தம் செய்த நாட்டுகோழிக்கறி துண்டுகளை சேர்த்து, 4 கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும்.
  7. ஒரு கொதி வந்ததும் ஊறவைத்த அரிசியை தண்ணீர் வடித்து சேர்க்கவும். பாதி அளவு வெந்ததும் நெய் சேர்த்து கிளறி 20 நிமிடம் தம்மில் வைத்து இறக்கவும்.
  8. இப்பொழுது சுவையான நாட்டுக்கோழி சிக்கன் பிரியாணி தயார்.