வீட்டிலே ரசப் பொடி அரைப்பது எப்படி!

Summary: இனி நீங்க ரசம் வெச்ச நல்லாவே இல்லனு யாரும் சொல்லமாட்டாக, என்னதான் சமையலில் புலியாக இருந்தாலும் ரசம் வைக்க தெரியாது சிலருக்கு. அதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் பொடி தான் இனிமேல் அந்த கவலை வேண்டாம். உங்களுக்கு ரசம் வைக்க தெரியலானாலும் இந்த மாறி ரசப்பொடி அரைத்து ரசம் செய்து பாருங்க வாசனை மூக்கை துளைக்கும். அப்புறம் யாரும் நீங்க வைக்குற ரசம் நல்லாவே இல்லனு சொல்லமாட்டாக. நீங்களும் இந்த ரசம் பொடியை அரைத்து ட்ரை பண்ணுங்க.

Ingredients:

  • ¼ கப் துவரம் பருப்பு
  • 6 காய்ந்த மிளகாய்
  • ¾ கப் தனியா
  • 2 டீஸ்பூன் மிளகு
  • 2 டீஸ்பூன் சீரகம்
  • 2 டீஸ்பூன் வெந்தயம்
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் துவரம் பருப்பை எண்ணெய் ஊற்றாமல் கடாயில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  2. வறுத்த பிறகு அதனை தனியாக எடுத்து காயவைக்கவும்.
  3. அடுத்தது தனியாவை வறுக்கவும்.
  4. மிளகு, காய்ந்த மிளகாய், சீரகம், மற்றும் வெந்தயம் சேர்த்து வறுக்கவும்.
  5. இறுதியாக சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலையை பொறித்து எடுத்துக்கொள்ளவும்.
  6. அனைத்தையும் நன்கு ஆறவிடவும். பிறகு மிக்சியில் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.
  7. அரைத்த ரசப்பொடியை ஆறவிட்டு காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
  8. இப்பொழுது சுவையான ரசப்பொடி தயார்.