காரசாரமான நண்டு தொக்கு இப்படி செய்து பாருங்க

Summary: விடுமுறை நாட்களில் எப்போதும் சிக்கன், மட்டன் என்று செய்து சுவைக்காமல், கடல் உணவுகளான மீன், நண்டு, இறால், போன்றவற்றையும் ருசித்து பாருங்கள். இந்த வார கடைசியில் இந்த செட்டிநாடு நண்டு தொக்கு செய்து ருசித்திடுகள்.

Ingredients:

  • ½ கிலோ சுத்தம் செய்த கடல் நண்டு
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  • உப்பு
  • 1 குழிக்கரண்டி கடலை எண்ணெய்
  • ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 ஸ்பூன் மல்லித்தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 2 ஸ்பூன் மிளகுத்தூள்
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. ஒரு கடாயை அடுப்பில் வைத்து அது சூடானதும், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முதலில் இஞ்சி பூண்டு விழுது போட்டு அத்துடன் பச்சைமிளகாய் ஒடித்து போடவும்.
  2. பச்சை வாசனை போனதும் வெட்டி வைத்த வெங்காயத்தை சேர்த்து கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் பொன்னிறம் ஆனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. இரண்டும் நன்றாக குழைய வதங்கியதும், தேவையான பொருட்களில் கொடுக்கப்பட்டுள்ள பொடிகளை சேர்த்து வதக்கவும்.
  5. இப்பொழுது உங்கள் சுவைக்கேற்ப தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி சுத்தம் செய்த நண்டுகளை சேர்த்து கிளறி விட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேக விடுங்கள்.
  6. நண்டில் இருந்து தண்ணீர் வற்றியதும் மிளகு தூள் சேர்த்து ஒரு முறை கிளறிவிட்டு அரைமணி நேரம் மூடி வைத்திருந்து பிறகு சாப்பிடவும்.
  7. இப்பொழுது சுவையான நண்டு வறுவல் தயார்.