ருசியான சிக்கன் முந்திரி கிரேவி செய்வது எப்படி!
Ingredients:
- ½ கிலோ சிக்கன்
- 20 சின்ன வெங்காயம்
- 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 2 ஸ்பூன் மல்லித்தூள்
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் தயிர்
- 2 ஸ்பூன் பால்
- கொத்தமல்லி
- 2 ஸ்பூன் எண்ணெய்
- உப்பு
- 10 முந்திரி
- ½ ஸ்பூன் மிளகு
- ½ ஸ்பூன் சீரகம்
- ½ ஸ்பூன் சோம்பு
- ¼ ஸ்பூன் கசகசா
- 1 துண்டு பட்டை
- 4 கிராம்பு
Equipemnts:
Steps:
- முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.
- அடுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக்கொள்ளவும்.
- பின் அரைத்த மசாலாவை சுத்தம் செய்த சிக்கனல் சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், தயிர், பால், சேர்த்து நன்கு பிசைந்து, அதனை அரை மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
- பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த சிக்கனை சேர்த்து 20 நிமிடம் குறைவான தீயில் வைத்து வேகவிடவும்.
- சிக்கன் நன்கு வெந்ததும், அதில் மால்லித்தழையை தூவி இறக்கினால் சிக்கன் முந்திரி கிரேவி தயார்.