வீடே மனமனக்கும் தலப்பாக்கட்டி பிரியாணி ஒரு முறை இப்படி செய்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Ingredients:
- ½ கிலோ சீரக சம்பா அரிசி
- ½ கிலோ மட்டன்
- 2 பெரியவெங்காயம்
- 2 தக்காளி
- 1 மேசைக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது
- 1 கப் தயிர்
- புதினா
- 3 பச்சைமிளகாய்
- 4 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
- பட்டை
- 2 கிராம்பு
- 2 ஏலக்காய்
- ½ பழம் எலுமிச்சைப்பழம்
- ¼ கப் எண்ணெய்
- 3 மேசைக்கரண்டி நெய்
- 3 மேசைக்கரண்டி டால்டா
- உப்பு
Equipemnts:
Steps:
- முதலில் வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
- அடுத்து அரிசியை கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
- ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், போட்டு தாளிக்கவும்.
- அடுத்து அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும், நறுக்கிய தக்காளி,புதினா, பச்சைமிளாகாய், சேர்த்து வதக்கவும்.
- தக்காளி வதங்கி கரைந்ததும், மட்டன் சேர்த்து வதக்கவும்.
- நன்கு வதங்கியதும், மிளகாய் தூள், தயிர், எலுமிச்சை சாறு, சேர்த்து 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.
- தண்ணீர் நன்கு கொதிக்கும் போது ஊறவைத்த அரிசியைப் போடவும்.
- அரிசி பாதி வெந்ததும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- அரிசி வெந்ததும் நெய், டால்டா சேர்த்து கிளறி இறக்கவும்.
- இப்பொழுது சுவையான தலப்பாக்கட்டு மட்டன் பிரியாணி தயார்.