காரசாரமான நெய் சிக்கன் வறுவல் இப்படி ஒரு முறை செய்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Summary: நீங்கள் அசைவ பிரியர்களா? அப்போ இந்த வார கடைசில் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும் ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும் இந்த நெய் சிக்கன் வறுவல். நீங்களும் ஒரு முறை செய்து பாருங்க.

Ingredients:

  • நெய்
  • ½ கிலோ கோழிக்கறி
  • மஞ்சள் தூள்
  • 1 பெரியவெங்காயம்
  • 12 காய்ந்தமிளகாய்
  • 2 டேபிள்ஸ்பூன் மிளகு
  • 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
  • 1 டேபிள் ஸ்பூன் சோம்பு
  • 2 டேபிள் ஸ்பூன் தனியா
  • இஞ்சி
  • 7 பல் பூண்டு
  • உப்பு
  • ½ பழம் எலுமிச்சை பழம்
  • 1 கப் தயிர்
  • 2 ஸ்பூன் காஸ்மீரி மிளகாய்த்தூள்
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் காய்ந்தமிளகாய், மிளகு, சீரகம் , சோம்பு, தனியா, சேர்த்து எண்ணெய் ஊற்றாமல் நன்றாக வருது அதனுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  2. பிறகு கோழிக்கறியை தண்ணீரில் சுத்தம் செய்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள், அரைத்த மசாலாவை சேர்த்து, அதனுடன் தயிர், மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிசைந்து நன்றாக அரைமணி நேரம் ஊறவிடவும்.
  3. அடுத்து கடாயில் தேவையான அளவு நெய் ஊற்றி அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு ஊறவைத்த கோழிக்கறியை அதனுடன் சேர்த்து கிளறவும்.
  4. பிறகு அதில் காஸ்மீரி மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். தண்ணீர் சேர்க்காமல் நன்றாக வேகவிடவும்.
  5. பிறகு வறுவல் பதத்திற்கு வந்த பிறகு அதனுடன் சிறிது கொத்தமல்லித்தழை தூவி, சிறிதளவு நெய் சேர்த்து பரிமாறலாம்.