சூப்பரான பனீர் புலாவ் இப்படி செய்து பாருங்க மீண்டும் மீண்டும் சாப்பிடத்தோன்றும்.

Summary: .

Ingredients:

  • 1 கப் பாசுமதி அரிசி
  • 1 கப் பனீர்த் துண்டுகள்
  • 1 வெங்காயம்
  • 2 பல் பூண்டு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 2 துண்டுகள் பட்டை
  • 3 பச்சைமிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • கொத்தமல்லி
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் அரிசியை கழுவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  2. வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், ஆகியவற்றை பொடியாக அறிந்து வைத்துக்கொள்ளவும்.
  3. பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சீரகம், பட்டை, போட்டு பொரிக்கவும்.
  4. பிறகு நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய்,சேர்த்து லேசாக வதக்கவும்.
  5. தண்ணீர் வடித்த அரிசியை இதனுடன் சேர்த்து லேசாக வதக்கி 2 கப் தண்ணீர் ஊற்றவும்.
  6. பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து உதிரி பதத்தில் வேக விடவும்.
  7. அடுத்து பனீர்த் துண்டுகளை லேசாக நெய்யில் பொரித்து நெய்யுடன் சாதத்தில் கொட்டி கலக்கவும்.
  8. நெய் வேண்டாம் என்று நினைப்பவர்கள், பனீர்த் துண்டுகளை பொடியாக்கி சூடான சாதத்த்தில் கலந்து கொத்தமல்லி தூவி 10 நிமிடம் மூடி வைக்கவும்.
  9. பச்சடியுடன் சேர்த்து பரிமாறலாம்.