இது போன்று ஒரு முறை மட்டனில் செய்து பாருங்க எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

Summary: தினமும் தோசை,இட்லி சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? அப்போ இந்த மாறி வித்தியாசமான முறையில் மட்டன் கொத்துக்கறி அடை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகள் முத்த எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. நீங்களும் ட்ரை பண்ணுங்க.

Ingredients:

  • 200 கிராம் புழுங்கல் அரிசி
  • 100 கிராம் கடலை பருப்பு
  • 100 கிராம் துவரம் பருப்பு
  • 20 கிராம் பாசிப்பருப்பு
  • 200 கிராம் ஆட்டுக்கறி
  • 1 டேபிள் 1ஸ்பூன் சோம்பு
  • 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
  • 5 காய்ந்த மிளகாய்
  • தேங்காய்
  • 1 துண்டு இஞ்சி
  • 8 பல் பூண்டு
  • 100 கிராம் சின்ன வெங்காயம்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி
  • பெருங்காயம்
  • உப்பு

Equipemnts:

  • 1 தோசை கல்

Steps:

  1. முதலில் கொத்தமல்லி, கறிவேப்பிலை, சின்னவெங்காயம், இஞ்சி, பூண்டு, தேங்காயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. புழுங்கல் அரிசியை தனியாகவும், கடலை பருப்பு, துவரம் பருப்பு,பாசிப்பருப்பை ஒன்றாக ஊறவைத்துக்கொள்ளவும்.
  3. அடுத்து புழுங்கல் அரிசி, பருப்புகளுடன், காய்ந்த மிளகாய், சீரகம், சோம்பு, சேர்த்து கிரைண்டரில் அரைத்துக்கொள்ளவும்.
  4. கடைசியில் மட்டன் கொத்துக்கறியை சேர்த்து ஒரு சுற்று சுற்றி அரைத்து எடுக்கவும்.
  5. பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு இத்துடன் கொத்தமல்லிதழை, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, தேங்காய், சின்ன வெங்காயம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாக அடை மாவு பதத்தில் கலந்துகொள்ளவும்.
  6. அடுத்து அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, அதில் எண்ணெய் தடவி மாவை அடைகளாக ஊற்றி மீண்டும் சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.