மாலை வேலையில் டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட மொறு மொறுனு உருளைக்கிழங்கு மெது வடை செய்து பாருங்க.
Summary: குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கீறிர்களா? அப்போ இந்த உருளைக்கிழங்கு மெது வடை செய்து கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. நீங்களும் இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.
Ingredients:
100 கிராம் உளுந்து
1 உருளைக்கிழங்கு
2 ஸ்பூன் அரிசி மாவு
10 வெங்காயம்
1 பச்சைமிளகாய்
கறிவேப்பிலை
கொத்தமல்லி தழை
இஞ்சி
உப்பு
எண்ணெய்
Equipemnts:
1 கடாய்
1 பெரிய பவுள்
Steps:
முதலில் உளுந்தை 2 மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
உருளைக்கிழங்கை தோல் நீக்கி வேகவைத்துக்கொள்ளவும்.
அடுத்து மிக்சியில் உளுந்தை தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து வேக வைத்த உருளைக்கிழங்கையும் அரைத்து வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, தேவையான அளவு உப்பு சேர்த்து மாவுடன் கலந்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.