சூப்பரான குஸ்கா செய்வது எப்படி!

Summary: .

Ingredients:

  • 1,2 கப் பாசுமதி அரிசி
  • 1 தக்காளி
  • 1 பெரியவெங்காயம்
  • சிறிது மல்லித்தழை
  • புதினா
  • 1 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 நட்சத்திர சோம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் கரம் மசாலா
  • உப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 கப் தேங்காய் துருவல்

Equipemnts:

  • 1 குக்கர்

Steps:

  1. முதலில் ஒரு கப் பாசுமதி அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். 3/4 கப் அளவிற்கு தேங்காய் பால் எடுத்துக்கொள்ளவும்.
  2. பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, நட்சத்திர சோம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும். அடுத்து வெங்காயம் சேர்த்து அத்துடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  3. பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு தக்காளி, மல்லித்தழை, புதினா, சேர்த்து வதக்கவும்.
  4. தக்காளி வதங்கியதும், மிளகாய் தூள், கரம் மசாலா, சேர்த்து கிளறி அதோடு ஊறவைத்த அரிசியில் தண்ணீர் வடித்து அரிசியை சேர்த்து கிளறவும். அதோடு 3/4 கப் தேங்காய் பால், தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி வைக்கவும்.
  5. ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். இப்பொழுது சுவையான குஸ்கா தயார்.