Summary: ஜூஸியான காரசாரமான சில்லி இறால் இப்படி ஒரு முறை செய்து பாருங்க வீட்டில் உள்ள எல்லோரும் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவார்கள். நீங்களும் ட்ரை பண்ணுங்க.
Ingredients:
500 கிராம் இறால்
2 டேபிள் ஸ்பூன் மிளகு
1 குடைமிளகாய்
4 டேபிள் ஸ்பூன் மைதா மாவு
2 பெரிய வெங்காயம்
4 டேபிள் ஸ்பூன் சோளமாவு
2 வெங்காயத்தாள்
2 டீஸ்பூன் மிளகுத்தூள்
1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ்
4 பல் பூண்டு
2 அங்குலம் இஞ்சி
2 பச்சைமிளகாய்
½ டீஸ்பூன் சர்க்கரை
உப்பு
நல்லெண்ணெய்
Equipemnts:
2 கடாய்
1 பவுள்
Steps:
முதலில் இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். பிறகு இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், இவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
அடுத்து குடைமிளகாய் முக்கோண வடிவில் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பிறகு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். முட்டையை உப்பு சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும்.முட்டையுடன் சோளமாவு, மைதா மாவு, மிளகுத்தூள் இவற்றை கலந்து வைத்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், சுத்தம் செய்த இறால் துண்டுகளை முட்டை கலவையில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து வைத்துக்கொள்ளவும்.
வேறு ஒரு வாணலில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், மிளகு, இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், குடைமிளகாய், சோயாசாஸ், இவற்றைப் போட்டு வதக்கவும்.
வதங்கிய பின் பொரித்து வைத்துள்ள இறால், வெங்காயத்தாள், சர்க்கரை, இவற்றை போட்டு கிளறி நன்றாக வதக்கி இறக்கி பரிமாறவும்.