தித்திக்கும் சேமியா பாயசம் செய்வது எப்படி?

Summary: நாமும் வீடுகளிலும் பாயாசம் செய்வது அரிதாகவே தான் செய்கிறோம். முதலில் ஆவது பலர் வீடுகளில் பண்டிகை நாட்களில் பாயாசம் செய்வார்கள் ஆனால் இப்போது அதுவும் குறைந்துவிட்டது. ஆம், பண்டிகை நாட்கள் சுப நிகழ்ச்சி, கல்யாண வீடு போன்ற இடங்களில் மட்டும் பாயாசம் சாப்பிட வேண்டும் என்று அவசியமில்லை நீங்களும் வீட்டிலேயே பாயாசம் செய்து உங்களது ஆசை தீர சாப்பிட்டுக் கொள்ளலாம். இன்று சேமியா பாயாசம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • ½ குழிக்கரண்டி நெய்
  • 10 piece முந்திரி பருப்பு
  • 15 piece உலர் திராட்சை
  • ½ கப் சேமியா
  • 2 கப் தண்ணீர்
  • ½ கப் சக்கரை
  • 1 சிட்டிகை உப்பு
  • ½ கப் பால்
  • 3 piece ஏலக்காய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 2 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு நெய் ஊற்றிக் கொள்ளுங்கள் நெய் சூடேறி வரும் வரை காத்திருந்து. நெய் சுடேறியவுடன் முந்திரி பருப்புகளை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
  2. முந்திரி பருப்பு பொன்னிறமாக வரும் வரை வறுத்தெடுக்கவும் முந்திரி பருப்பு பொன்னிறமாக வந்தவுடன் உலர் திராட்சையும் சேர்த்து வதக்கவும்.
  3. பின்பு ஒரு பவுளில் வறுத்த எடுத்த பொருள்களை எடுத்து வைத்துவிட்டு. அதே கடாயில் தீயை மட்டும் குறைத்து வைத்துவிட்டு சேமியாவே சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  4. சேமியாவும் பொன்னிறமாக வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளுங்கள். சேமியா பொன்னிறமாக மாறிய பின் தனியாக ஒரு பவுளில் சேமியாவை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  5. பின் கடாயில் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும் தண்ணீர் கொதித்தவுடன் அதில் உப்பு வறுத்த சேமியாவையும் சேர்த்து கலக்கவும்.
  6. இப்படியே சேமியா மென்மையாக வரும் வரை கொதிக்க விடவும் பின்பு இத்துடன் சர்க்கரை ஏலக்காய் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளுங்கள்.
  7. பின்பு இதனுடன் பாலையும் சேர்த்து கொதிக்க விடவும் பால் நன்றாக சூடேறி கொதித்து வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள்
  8. பின் நாம் முதலில் நெய்யில் வறுத்து எடுத்து வைத்துள்ளார் முந்திரி பருப்பையும் உலர்திராட்சையும் இதனுடன் சேர்த்து கலக்கி கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான சேமியா பாயாசம் தயாராகி விட்டது.