மதிய உணவாக செய்ய ஏற்ற சுவையான கொத்தமல்லி புலாவ் எப்படி செய்வது ?

Summary: குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்பவர்களுக்கு ஏற்ற அட்டகாசமான மதிய உணவு ரெசிபி இது போன்று ஒரு முறை செய்து கொடுத்து பாருங்கள் மீண்டும் மீண்டும் கேப்பார்கள் ஏனென்றால் இந்த கொத்தமல்லி புலாவ் அந்தளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடும் இந்த கொத்தமல்லி புலாவ் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.

Ingredients:

  • 1 கப் கொத்தமல்லித்தழை
  • 2 கப் பாசுமதி அரிசி
  • ½ கப் தேங்காய் பால்
  • 1 டேபிள் ஸ்பூன் தயிர்
  • 2 பெரிய வெங்காயம்
  • இஞ்சி
  • 4 பல் பூண்டு
  • 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1 தலா லவங்கம், ஏலக்காய்
  • பட்டை
  • எண்ணெய்
  • உப்பு
  • நெய்

Equipemnts:

  • 1 குக்கர்

Steps:

  1. முதலில் கொத்தமல்லித்தழையை நன்கு கழுவிக் கொள்ளவும்.
  2. அடுத்து பெரியவெங்காயத்தை நீளமாக மெல்லியதாக நறுக்கவும்.
  3. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லிதழை ஆகியவற்றை மிக்சியில் சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
  4. பிறகு குக்கரில் எண்ணெய், நெய் விட்டு காய்ந்ததும், பட்டை, லவங்கம், ஏலக்காய், சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. பின்னர், அரைத்த கொத்தமல்லி விழுது, தயிர், எலுமிச்சை சாறு, தேங்காய் பால், ஆகியவற்றை சேர்த்துக் கிளறி, இரண்டரை கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
  6. நன்றாக கொதித்ததும், கழுவிய அரிசியை சேர்த்துக் கிளறி குக்கரை மூடவும்.
  7. ஆவி வந்ததும், வெயிட் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கவும். இப்பொழுது சுவையான கொத்தமல்லிதழை புலாவ் தயார்.