நாவில் எச்சி ஊறும் முந்திரி சிக்கன் வறுவல் செய்வது எப்படி ?

Summary: நீங்கள் எப்பொழுதும் போல் சிக்கன் வாங்கி காரசாரமாக கிரேவி, வறுவல், குழம்பு என ஒரே மாதிரியாக செய்வதற்கு பதிலாக குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் அவர்களுக்கு மிகவும் பிடித்த முந்திரி சிக்கன் வறுவல் இப்படி ஒரு முறை செஞ்சி கொடுத்து பாருங்கள் மீண்டும் மீண்டும் விரும்பி கேட்டு சாப்பிடுவார்கள். அவர்கள் மட்டுமல்ல உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அடுத்த முறையும் உங்களை இது போல் செய்ய சொல்லி கேட்பார்கள்.

Ingredients:

  • ¼ கிலோ சிக்கன்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 ஸ்பூன் மல்லித்தூள்
  • கறிவேப்பிலை
  • 3 காய்ந்த மிளகாய்
  • 10 முந்திரி
  • 1 ஸ்பூன் மிளகுத்தூள்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • கொத்தமல்லி
  • 3 ஸ்பூன் எண்ணெய்
  • பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய், சேர்த்து தாளிக்கவும்.
  2. இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது தக்காளி, சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. பிறகு மிளகாய் தூள், மல்லி தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு வேக விடவும்.
  4. சிக்கன் துண்டுகள் நன்கு வெந்ததும், தண்ணீர் வற்றிய பின் முந்திரி, கறிவேப்பிலை, மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
  5. பிறகு அதன் மேல் கொத்தமல்லி இலைகளை தூவி விடவும். இபொழுது சுவையான முந்திரி சிக்கன் வறுவல் ரெடி.