இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான பூண்டு சட்னி செய்வது எப்படி ?

Summary: பூண்டு சட்னி இந்த சட்னி இட்லி, தோசை போன்றவற்றையுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.குறைந்த நேரத்தில் சுலபமாக செய்து விடலாம். வீட்டில் உள்ள எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள் நீங்களும் ஒரு முறை இந்த பூண்டு சட்னி ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 12 சின்ன வெங்காயம்
  • 8 பல் பூண்டு
  • 3 காய்ந்த மிளகாய்
  • உப்பு,புளி
  • கறிவேப்பிலை
  • கடுகு
  • பெருங்காயத் தூள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிளகாய், வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
  2. பிறகு மிக்சியில் மிளகாய், வெங்காயம், பூண்டு, தேவையான அளவு உப்பு, மற்றும் சிறிதளவு புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  3. அடுத்து மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் சிறிதளவு பெருங்காயம், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டி பரிமாறவும்.
  4. இப்பொழுது சுவையான பூண்டு சட்னி தயார்.