காரசாரமான சுவையில் ரைஸ் கட்லெட் செய்வது எப்படி ?

Summary: இன்று வீட்டிலே சுலபமாக குறைந்த நேரத்தில் செய்ய கூடிய ஸ்நாக்ஸ் பற்றி தான் பார்க்க போகிறோம். ஆம் இன்று காரசாரமான சுைவையில் ரைஸ் கட்லெட் எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம். இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அடுத்தமுறையும் இது போல் செய்ய சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.அதனால் இன்று இந்த காரசாரமான ரைஸ் கட்லெட் எப்படி செய்வது என பார்க்கலாம்.

Ingredients:

  • 1 கப் வேகவைத்த சாதம்
  • 2 டீஸ்பூன் சோள மாவு
  • ½ டீஸ்பூன் சீரகம்
  • ½ டீஸ்பூன் பெருங்காயம்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • ½ டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • ½ டீஸ்பூன் தனியா தூள்
  • ½ டீஸ்பூன் மிளகுத்தூள்
  • ½ டீஸ்பூன் கரம் மசாலா
  • ½ டீஸ்பூன் சாட் மசாலா
  • இஞ்சி
  • கொத்தமல்லி இலை
  • புதினா இலை
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 தோசை கல்

Steps:

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் சாதத்தை போட்டு, நன்கு பிசைந்து அதில் சோள மாவு, மற்றும் நாம் தேவையான பொருட்களில் கொடுத்துள்ள மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  2. அதன் பிறகு சிறு உருண்டைகளாக எடுத்து கட்லெட் போல் தட்டி தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி அதனை போட்டு இரு புறமும் திருப்பி போட்டு பொன்னிறமாக வந்தவுடன் எடுத்துக் கொள்ளவும்.
  3. இப்பொழுது சுவையான ரைஸ் கட்லெட் ரெடி.