காரசாரமான சுவையில் மீன் முட்டை வறுவல் செய்வது எப்படி ?

Summary: மீன் வறுவல் அனைவரும் ருசித்திருப்பீர்கள் ஆனால் மீன் முட்டை வறுவல் செஞ்சி சாப்டதுண்டா? இந்த மீன் முட்டை வறுவல் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று அதனால் இந்த வார இறுதியில் இந்த மீன் முட்டை வாங்கி இது போன்று செஞ்சி சுவைத்திடுகள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 200 கிராம் மீன் முட்டை
  • 1 வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • ½ ஸ்பூன் கடுகு
  • ½ ஸ்பூன் சீரகம்
  • மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் மிளகு தூள்
  • கருவேப்பிலை
  • இஞ்சி
  • 5 ஸ்பூன் தேங்காய் துருவல்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. அடுத்து மீன் முட்டையை சுத்தம் செய்துகொள்ளவும்.
  3. பிறகு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், சீரகம், கடுகு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பின்பு வெங்காயம், காய்ந்த மிளகாய்,போட்டு வதக்கவும்.
  4. வெங்காயம் சற்று வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், சேர்த்து கிளறவும்.
  5. அடுத்து சுத்தம் செய்த மீன் முட்டையை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
  6. மீன் முட்டை நன்றாக உதிர் உதிராக வரும் வரை கைவிடாமல் கிளறிவிடவேண்டும்.
  7. நன்கு உதிர் உதிராக வந்த பிறகு அதில் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.