குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பச்சைப்பயிறு இனிப்பு சுண்டல் செய்வது எப்படி!

Summary: பச்சைப்பயிறு இது மிகவும் சத்தான பயிறு இதை வைத்து குழந்தைகளுக்கு வீட்டிலே சுவையான இனிப்பான சுண்டல் செய்து விடலாம். இதை செய்வதற்கு குறைந்த நேரம் மற்றும் சுலபமாக செய்து விடலாம். இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அடுத்தமுறையும் இது போன்று செய்ய சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 1 கப் பச்சைப்பயிறு
  • ½ கப் பொடித்த வெல்லம்
  • ¼ கப் தேங்காய் துருவல்
  • ஏலக்காய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் நெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 குக்கர்

Steps:

  1. முதலில் பச்சைப்பயிரை வெறும் வாணலில் வறுத்து குக்கரில் நன்கு வேக வைக்க வேண்டும்.
  2. பிறகு ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் கால் கப் தண்ணீர் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து பாகாக காய்ச்ச வேண்டும்.
  3. இத்துடன் நெய், வேகவைத்த பச்சைப்பயிறு, இரண்டையும் சேர்த்து கிளறி, தேங்காய் துருவல், ஏலக்காய் இரண்டையும் சேர்த்து கிளறி இறக்கவும்.