வாயில் வைத்தவுடன் கரையும் சுவையான அசோகா அல்வா செய்வது எப்படி ?

Summary: ஆல்வா என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். வாயில் வைத்ததுமே கரைந்து போகும் அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகளுக்கு வீட்டிலேயே அல்வா செய்து கொடுத்து பாருங்கள் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். நீங்களும் இந்த அசோகா அல்வா ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 100 கிராம் பாசிப்பருப்பு
  • 200 கிராம் சர்க்கரை
  • 2 டேபிள் ஸ்பூன் கோதுமைமாவு
  • 50 கிராம் நெய்
  • 10 முந்திரி பருப்பு
  • கேசரி கலர்

Equipemnts:

  • 2 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 மிக்சி

Steps:

  1. முதலில் அடுப்பில் கடாயை வைத்து 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் முந்திரி பருப்பை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  2. பிறகு ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு சேர்த்து மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். பருப்பு நன்றாக வெந்ததும் நன்கு மசித்து மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
  3. பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து கோதுமை மாவு சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். பிறகு அதனுடன் மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து, பாதி அளவு நெய் சேர்த்து கை விடாமல் கிளறவும்.
  4. அல்வா பதத்திற்கு சுருண்டு வரும் பொழுது சர்க்கரை, கேசரி கலர் இரண்டையும் சேர்த்து கை விடாமல் கிளறவும்.
  5. சர்க்கரை நன்கு கரைந்து பருப்போடு சேர்ந்து கெட்டியாகும் வரை நன்கு கிளறிவிடவும்.
  6. பிறகு மீதமுள்ள நெய் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு இரண்டையும் சேர்த்து நன்கு கிளறி அடுப்பை நிறுத்தவும்.