மொறு மொறுப்பான பாகற்காய் பக்கோடா செய்வது எப்படி ?

Summary: நாம் முந்திரி பக்கோடா, வெங்காய பக்கோடா போன்றவற்றை சாப்பிட்ருப்போம் பாகற்காய் பக்கோடாவும் சிலர் சுவைத்திருப்பார்கள், ஆனால் பாகற்காய் பக்கோடாவை வீட்டில் செய்துருக்க மாட்டார்கள். இப்போ நாம் வீட்டிலையே சுலபமாக சுவையான பாகற்காய் பக்கோடா எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம்.

Ingredients:

  • ¼ கிலோ பாகற்காய்
  • ¼ கிலோ கேழ்வரகு மாவு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் பகற்கவை சிறு சிறு வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. பிறகு கேழ்வரகு மாவில் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், சேர்த்து கெட்டியாக பிசைந்துக் கொள்ளவும்.
  3. அடுத்து ஒரு கடாய் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், பாகர்காவை எடுத்து கேழ்வரகு கலவையில் கலந்து பக்கோடா போன்று பொரித்து எடுக்கவும்.
  4. இப்பொழுது சுவையான பாகற்காய் பக்கோடா தயார்.