நாவில் எச்சி ஊறும் பீட்ரூட் சட்னி செய்வது எப்படி ? வாருங்கள் பார்க்கலாம்..

Summary: பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தம் அதிகரிக்கும் என்பதுதான் நம் அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் இதில் பலவிதமான சத்துகள் நிறைந்துள்ளன. பீட்ரூட்டில் உடலுக்குத் தேவையான மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இவ்வளவ சத்துள்ள பீட்ரூட்டை வைத்து சட்னி செய்யலாம் வாருங்கள்.

Ingredients:

  • ½ TBSP சீரகம்
  • 1 TBSP கடலை பருப்பு
  • ⅗ கப் பீட்ரூட்
  • 1 TBSP உளுந்த பருப்பு
  • 4 பல் பூண்டு
  • ½ கப் துருவிய தேங்காய்
  • எண்ணெய்
  • 2 காய்ந்த மிளகாய்
  • எண்ணெய்
  • ½ TBSP உளுந்தம் பருப்பு
  • 1 TBSP கடுகு
  • 1 காய்ந்த மிளகாய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும், எண்ணெய் சூடேறியதும் உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம் மிளகாய் வத்தல் போன்றவற்றை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  2. பின்பு வறுத்து எடுத்த இந்த பொருட்களை ஒரு பவுளில் போட்டு ஆற வைத்து விடுங்கள் பின் மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள்.
  3. எண்ணெய் சூடேறியவுடன் பீட்ரூட்டை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு ஐந்து நிமிடம் பீட்ரூட்டை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள், பீட்ரூட் வதக்கிய பின் அனுடன் தேங்காய் சேர்த்து நாம் ஏற்கனவே வறுத்து எடுத்து வைத்துள்ள பொருட்கள் சேர்த்து நன்றாக கிளறி விட்டு வதக்கிக் கொள்ளுங்கள்.
  4. பின்பு கடாய் இறக்கி பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு சூடு ஆறும் வரை காத்திருங்கள் சூடு ஆரியவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மை போல அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த பீட்ரூட்டை ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள்.
  5. பின்பு கடாயை அடுப்பில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியவுடன் கடுகு, கருவேப்பிலை, உளுந்தம் பருப்பு, மிளகாய் வத்தல் சேர்த்து தாளிக்கவும்.
  6. அதற்கு பின் தாளித்ததை பீட்ரூட் சட்னியுடன் சேர்த்து நன்றாக கலக்கி எடுத்துக் கொள்ளுங்கள் உப்பு பற்றவில்லை என்றால் சிறிதளவு போட்டுக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான பீட்ரூட் சட்னி இனிதே தயாராகி விட்டது.