Summary: அசைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்களுக்குஇந்த நெய் சிக்கன் வறுவல்உணவை ஒரு முறையேனும் சமைத்து, ருசி பார்த்துவிடுங்கள்.
Ingredients:
15 கேஷ்மீர் சிவப்பு மிளகாய்
1½ டேபிள் ஸ்பூன் வரமல்லி
1 டேபிள் ஸ்பூன் மிளகு
1 டேபிள் ஸ்பூன் சோம்பு
1 டேபிள் ஸ்பூன் சீரகம்
4 பல் பூண்டு
இஞ்சி
½ கிலோ சிக்கன்
½ கப் தயிர்
¼ கப் நெய்
2 பெரியவெங்காயம்
Steps:
ஒரு கடாயில் கேஷ்மீர் சிவப்பு மிளகாய், வரமல்லி, மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை சேர்த்து குறைவான தீயில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை வறுக்கவும்.
வறுத்த பிறகு சிறிது நேரம் ஆறவிடவும், பிறகு அவை அனைத்தையும் மிக்சியில் போடவும். அதனுடன் சிறிய துண்டு இஞ்சி, 4 பல் பூண்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைக்கவும்.
பின்பு ½ கிலோ சிக்கனில் அரைத்த மசாலாவை சேர்க்கவும்.
அதனுடன் ½ கப் தயிர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
மசாலாவை நன்றாக கலந்து பிரிட்ஜில் 30 நிமிடம் ஊறவைக்கவும்.
பின்பு ஒரு கடாயில் ¼ கப் நெய் சேர்க்கவும்.
நெய் சூடானதும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பெரியவெங்காயத்தை, அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வதங்கிய பிறகு ஊறவைத்த சிக்கனை அதில் சேர்த்து வேகவிடவும் (தண்ணீர் சேர்க்கவேண்டாம்)
வெந்தபிறகு கருவேய்ப்பிலை சிறிதளவு சேர்த்து கிளறவும்.