மணமணக்கும் சுவையான தக்காளி பாத் செய்வது எப்படி ?

Summary: குழந்தைகளுக்கு மத்திய உணவாக தக்காளி சாதம் வழக்கம் போல் செய்து கொடுப்பதற்கு பதிலா இப்படி புதுவிதமான செய்து கொடுங்கள், உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த ரெசிபி நீங்கள் சுலபமாகவும் குறைவான நேரத்திலும் செய்துவிடலாம்.

Ingredients:

  • 200 கிராம் தக்காளி
  • 2 பெரிய வெங்காயம்
  • 3 பச்சைமிளகாய்
  • 3 பல் பூண்டு
  • இஞ்சி
  • மஞ்சள் தூள்
  • புதினா
  • கொத்தமல்லி தழை
  • 1 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  • 2 கப் உதிர் உதிராக வடித்த சாதம்
  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், சேர்த்து வதக்கி, பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து மேலும் வதக்கவும்.
  2. இதனுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து, பூண்டு, இஞ்சியை நசுக்கி சேர்க்கவும்.
  3. எல்லாமாக சேர்த்து வெந்ததும் கொத்தமல்லி தழை, புதினா சேர்த்து வதக்கி, கரம் மசாலா சேர்த்து இறக்கிவிடவும்.
  4. பிறகு உதிராக வடித்த சாதத்தை அதில் சேர்த்து கிளறினால் தக்காளி பாத் தயார்.