நாவில் எச்சி ஊறும் சுவையான முட்டை கலக்கி செய்வது எப்படி ?
Summary: ரோட்டு கடைகளிலும் நம்ப ஊர் பரோட்டா கடைகளிலும் இந்த முட்டை கலக்கி கிடைக்கும். ஹாஃப் பாயில் போலவே முட்டை கலக்கிக்கும் தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் இன்று இந்த முட்டை கலக்கியை வீட்டிலே எப்படி செய்வதென்ருதான் பார்க்கப்போகிறோம்.
Ingredients:
1 முட்டை
½ டீஸ்பூன் மிளகுத் தூள்
கொத்தமல்லி தழை
உப்பு
Equipemnts:
1 தோசை கல்
1 பவுள்
Steps:
முதலில் தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடாக்கவும். பிறகு ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அத்துடன் சிறிதளவு மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
இதனை தோசை தவாவில் ஊற்றி பரப்பவும். அதன் ஓரங்கள் வெந்ததும் நான்கு பக்கமும் மடித்துப் போடவும். முட்டை அரை வேக்காடாக இருக்க வேண்டும்.
இதனை ஒரு நிமிடம் திருப்பி போட்டு எடுக்கவும். இதன் மீது, மிளகுத்தூள், சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
முட்டை அடிக்கும் போது கூடவே சிக்கன் அல்லது மட்டன் குழம்பை ஊற்றி அடித்து கலக்கி செய்தல் சுவையாக இருக்கும்.