மாலை வேலையில் டீ, காப்பியுடன் சாப்பிட ஏற்ற எக் பிங்கர்ஸ் செய்வது எப்படி ?

Summary: இன்று நாம் மாலை நேரங்களில் டீ, காபியுடன் ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடுவதற்கு, வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய எக் பிங்கர்ஸ் ரெசிபி. இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏனென்றால் இந்த எக் பிங்கர்ஸ் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அடுத்தமுறையும் இது போல் உங்களை செய்ய சொல்லி கேட்பார்கள்.

Ingredients:

  • 4 முட்டை
  • 1 ஸ்பூன் மிளகு தூள்
  • ½ ஸ்பூன் மிளகாய் தூள்
  • ¼ ஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 2 ஸ்பூன் மைதா
  • 2 ஸ்பூன் பால்
  • உப்பு
  • எண்ணெய்
  • பிரட் க்ரம்ஸ்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 பெரிய தட்டு
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் முட்டை, மிளகு தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.
  2. அதனை எண்ணெய் தடவிய தட்டில் ஊற்றி வேகவைக்கவும்.
  3. வெந்த முட்டையை நீளவாக்கில் கட்பண்ணி வைக்கவும்.
  4. பிறகு ஒரு கிண்ணத்தில் முட்டை , பால், உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
  5. மற்றொரு தட்டில் மைதா, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
  6. அடுத்து பிரட் க்ரம்ஸை ஒரு தட்டில் கொட்டி பரப்பி விடவும்.
  7. பிறகு வேகவைத்து கட்பண்ண முட்டையை முட்டை கலவையில் நினைத்து அடுத்து மசலா மாவில் தேய்த்து மீண்டும் முட்டை கலவையில் நினைத்து பிரட் க்ரம்ஸில் பிரட்டி எடுக்கவும்.
  8. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், மிதமான தீயில் முட்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  9. இப்பொழுது எக் பிங்கர்ஸ் ரெடி.