மணமணக்கும் சுவையான வெங்காய சாதம் செய்வது எப்படி ?

Summary: ஒரு முறை இந்த வெங்காய சாதத்தை செய்து சாப்பிட்டு பாருங்கள் பிறகு நிச்சயம் மிஸ் பண்ண மாட்டீங்க. உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் அவர்களுக்கு பிடித்தமான சாதம் ரெசிபியாக கூ மாறிப்போகும். அடுத்தமுறையும் இது போல் செய்து தர சொல்லி உங்களிடம் கேட்பார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 2 ஆழாக்கு புலாவ் அரிசி
  • 4 வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • பட்டை
  • 1 கப் வெண்ணெய்
  • உப்பு
  • 1 கைப்பிடி வறுத்த முந்திரி

Equipemnts:

  • 1 குக்கர்

Steps:

  1. முதலில் அரிசி நன்கு களைந்து ஊற வைக்கவும்.
  2. குக்கரில் வெண்ணெய் சேர்த்து அது உருகியதும் ஏலக்காய், கிராம்பு, பட்டை, சேர்த்து தாளிக்கவும்.
  3. அதில் வெங்காயத்தையும், கீறிய பச்சை மிளகாயையும் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  4. நன்கு வதங்கியதும் அரிசியையும் போட்டு வதக்கவும்.
  5. பிறகு 4 ஆழாக்கு தண்ணீர் ஊற்றி உப்பை சேர்த்து வேக விடவும்.
  6. அரிசி நன்கு வெந்ததும் இறக்கி, வறுத்த முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்.
  7. இப்பொழுது வெங்காய சாதம் தயார்.