கமகமக்கும் சுவையான கொண்டக்கடலை தோசை செய்வது எப்படி ?

Summary: வழக்கம் போல் அரிசி மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? அப்போ இந்த ரெசிபி ட்ரை பண்ணுங்க கொண்டக்கடலை தோசை உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. இந்த கொண்டைக்கடலை தோசையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இந்த தோசை அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 1 கப் கொண்டக்கடலை
  • 5 காய்ந்த மிளகாய்
  • 2 பல் பூண்டு
  • சீரகம்
  • டீஸ்பூன் எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

Steps:

  1. முதலில் கொண்டைக்கடலையை 5 மணி நேரம் ஊறவைத்து பூண்டு, காய்ந்தமிளகையுடன் மிக்சியில் தோசை மாவு பதத்திற்கு அரைத்து உப்பு சேர்த்து கலந்த்துக்கொள்ளவும். மாவை புளிக்க வைக்கத் தேவையில்லை.
  2. பிறகு கடாயை அடுப்பில் வைத்து ½ டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்து மாவில் சேர்த்து கலந்துகொள்ளவும்.
  3. பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசையாக ஊற்றி அதை சுற்றி சிறிதளவு எண்ணெய் விட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.
  4. இப்பொழுது சூப்பரான சத்தான கொண்டைக்கடலை தோசை தயார்.