வீடே மணமணக்கும் சுவையான ஹரியாலி சிக்கன் செய்வது எப்படி ?

Summary: நீங்கள் அசைவ பிரியர்களா? அப்போ இந்த வார கடைசியில் இந்த ஹரியாலி சிக்கன் ரெசிபியை செய்து பாருங்கள் காரசாரமாக மற்றும் அட்டகாசமான சுவையில் இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கபட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க

Ingredients:

  • ½ கிலோ சிக்கன்
  • ¼ கப் தயிர்
  • 1 மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு
  • உப்பு
  • எண்ணெய்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 கைப்பிடி புதினா
  • 2to3 பச்சைமிளகாய்
  • 4 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 1 தேக்கரண்டி சீரகம்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கிரில் பேன்

Steps:

  1. முதலில் சிக்கனை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். பிறகு அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  2. அடுத்து சிக்கனுடன் அரைத்த விழுது, தயிர், எலுமிச்சை சாறு, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
  3. இதனை குறைத்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
  4. கிரில் பேனில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஊறவைத்த சிக்கனை தனி தனியாக போட்டு வேகவிடவும்.
  5. ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு அதனை திருப்பி போட்டு வேகவிடவும்.
  6. இப்பொழுது ஹரியாலி சிக்கன் தயார்.