காரசாரமான பஞ்சாபி பன்னீர் மசாலா செய்வது எப்படி ?

Summary: உங்களுக்கு வேகமாகவும் எளிமையாகவும் ஏதாவது கிரேவி செய்ய வேண்டும் என்று இருந்தால் அப்போது இந்த பஞ்சாபி பன்னீர் மசாலா செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த பஞ்சாபி பன்னீர் மசாலா செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பாடு விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் குழந்தைகளுக்கு சப்பாத்தி பூரி போன்றவற்றிற்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 10 பல் பூண்டு
  • 5 பச்சை மிளகாய்
  • கொத்தமல்லி
  • 10 முந்திரி பருப்பு
  • ½ பழம் எலுமிச்சை சாறு
  • தண்ணீர்
  • 2 tbsp வெண்ணெய்
  • ½ tsp சோம்பு
  • ½ tsp ஒமம்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • 1 tbsp தனியா தூள்
  • ½ tsp சீரக தூள்
  • ½ tsp கரம மசாலா
  • தண்ணீர்
  • உப்பு
  • கஸ்தூரி மேத்தி
  • பட்டர் துருவியது

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், சிறிய கொத்தமல்லி, முந்திரிப்பருப்பு, எலுமிச்சை பழச்சாறு, சிறிது கல் உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள்.
  2. அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து வெண்ணெய் உருகி காய்ந்ததும் அதில் அரை டீஸ்பூன் சோம்பு மற்றும் அரை டீஸ்பூன் ஒமம் சேர்த்து ஒரு ஐந்து வினாடிகள் நன்கு வறுத்துக் கொள்ளுங்கள்.
  3. அதன் பின்பு நாம் மிக்ஸியில் அரைத்த பேஸ்ட்டை கடாயில் சேர்த்து நன்கு வேக விடுங்கள். பின் விழுது ஓரளவு வெந்தவுடன் இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி, ஒரு டீஸ்பூன் தனியாத்தூள், அரை டீஸ்பூன் சீரகத்தூள் மற்றும் அரை டீஸ்பூன் கரம் மசாலா தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  4. பின் கடாயை மூடி வைத்து மசாலா பொருட்கள் வேக வைத்து பின் இதனுடன் நாம் வைத்திருக்கும் 10 பன்னீர் துண்டுகளை சேர்த்து அதன் மேல் சிறிய கஸ்தூரி மேத்தி தூவி அதன் மேல் பட்டரை துருவிய சேர்த்து கொள்ளவும் .
  5. பின் கடாயை மூடி வைத்து ஒரு ஐந்து நிமிடம் வேக வைக்கவும். பின் ஐந்து நிமிடம் கழித்து சாப்பிட பரிமாறுங்கள். அவ்வளவு தான் சுவையான பஞ்சாபி பன்னீர் மசாலா இனிதே தயாராகிவிட்டது.