குழந்தைகளுக்கு மதிய உணவாக மணமணக்கும் பேபி உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி ?

Summary: இந்த பேபி உருளைக்கிழங்கு சாதம் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள், குழந்தைகள் மட்டும் அல்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் இதுபோன்று ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு செய்து கொள்ளுங்கள் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவில் அட்டகாசமான சுவையில் இருக்கும் அடுத்த முறையும் இது போல் செய்து தர சொல்லி உங்களை வற்புறுத்துவார்கள் இதை நீங்கள் செய்வதும் குறைந்த நேரத்தில் எளிமையாக செய்து விடலாம் அதிகமாக வேலையும் வைக்காது.

Ingredients:

  • 100 கிராம் பேபி உருளைக்கிழங்கு
  • 2 பெரிய வெங்காயம்
  • 3 பல் பூண்டு
  • பச்சை மிளகாய்
  • உப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 2 ஏலக்காய்
  • பட்டை
  • 2 பிரிஞ்சி இலை
  • 3 கிராம்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் அரிசியை உதிராக வேகவைக்கவும்.
  2. பேபி உருளைக்கிழங்கை தோல் சீவி, பொடியாக நறுக்கவும்.
  3. அடுத்து வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, பிரிஞ்சி இலை, ஏலக்காய், கிராம்பு, சேர்த்து வதக்கவும்.
  4. இத்துடன் லேசாகச் சீவிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
  5. பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
  6. இதில் நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும். உருளை வெந்ததும், வெந்த சாதம், தேவையான அளவு உப்பு, சேர்த்து புரட்டவும். இப்பொழுது பேபி உருளைக்கிழங்கு சாதம் தயார்.
  7. குறிப்பு: ஒரு கப் அரிசிக்கு ஒரு கப் தண்ணீர் சேர்த்தால் போதும். அதிகம் சேர்த்தால் பாசுமதி அரிசி குழைந்து விடும்.