புதுமையான முறையில் சுவையான உளுந்த பருப்பு சாதம் செயவது எப்படி ?

Summary: வீடுகளில் பல வகையான சாதங்கள் சமைத்து சாப்பிட்டு இருப்போம் ஆனால் இன்று புதுமையாக நம் தமிழக பாரம்பரிய உணவுகளில் ஒன்றான உளுந்து சாதம் நீங்க சாதம பற்றி பார்க்கலாம். அதுமட்டுமின்றி, வயிற்றுப்போக்கை எதிர்த்துப் போராட கருப்பு உளுந்து உதவுகிறது. மேலும், கருப்பு உளுந்து உடல் உறுப்புகளுக்கு அதிக ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தை வழங்கவும் உதவுகிறது. இதன் மூலம் உடலின் ஆற்றலை அதிகரிக்கச் செய்ய முடியும். மேலும், கருப்பு உளுந்தின் மூலம் எலும்புகளின் தாது அடர்த்தி அதிகரிக்கும். இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ள உளுந்த பருப்பை கொண்டு எப்படி உளுந்து சாதம் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.

Ingredients:

  • 1 கப் அரிசி
  • ½ கப் உளுந்தம் பருப்பு
  • 1 இலை பிரியாணி இலை
  • 1 PIECE பட்டை
  • 3 PIECE கிராம்பு
  • ½ TBSP சீரகம்
  • 1 TBSP சுக்குபொடி
  • 5 பல் பூண்டு
  • ½ கப் துருவிய தேங்காய்
  • 2 TBSP பனைவெல்லம்
  • தண்ணீர்
  • கொத்தமல்லி
  • உப்பு

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் அரிசியையும் உளுந்தையும் இரண்டு முறை தண்ணீர் வைத்து நன்றாக அலசிக எடுத்து கொள்ளவும்.
  2. அதன் பின்பு குக்கரை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறும் வரை காத்திருங்கள். என்னை சூடேறியவுடன்,
  3. அதில் பிரியாணி இலை, கிராம்பு, பட்டை, சீரகம், கருவேப்பிலை சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ளுங்கள். பின்பு இதனுடன் இதனோடு பூண்டு, துருவிய தேங்காய் சுக்குத்தூள், பனைவெல்லம் சேர்த்து நன்றாக கிளறி விட்டுக் கொள்ளுங்கள்.
  4. பின்பு எவ்வளவு அரிசி, உளுந்து எடுத்து உள்ளீர்களோ அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் தண்ணீர் கொதித்து வந்தவுடன்.
  5. எடுத்து வைத்திருக்கும் உளுந்தம் பருப்பு அரிசி சேர்த்து கொள்ளுங்கள் பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி விடுங்கள்
  6. பின்பு குக்கரில் மூன்றில் இருந்து நான்கு விசில் வரும் வரை காத்திருக்கவும். விசில் வந்த பின் குக்கரை கீழே இறங்கி விடுங்கள்.
  7. குக்கரில் பிரஷர் இறங்கிய பின் குக்கர் மூடியை திறந்து சிறிது அளவு கொத்தமல்லியை தூவி சாப்பிட பரிமாறலாம் அவ்வளவுதான் சுவையான உளுந்தம் பருப்பு சாதம் இனிதே தயாராகி விட்டது.