மீன்டும் மீன்டும் சாப்பிட தோன்றும் காரசாரமான காடை 65 செய்வது எப்படி ?

Summary: காடை இறைச்சியை அதிக மக்களுக்கு சுவையாக சமைக்க தெரியாத ஒரு உணவாக இன்றளவும் உள்ளது. அதனால் ஹோட்டல் சென்றால் மட்டும் வாங்கி சாப்பிட்டு கொள்வார்கள். அதனால் நாம் இன்று காடையை வைத்து காடை 65 செய்வது பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 4 காடை
  • 3 ஸ்பூன் மிளகாய் தூள்
  • ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 3 ஸ்பூன் கார்ன் பிளவர் மாவு
  • 1 ஸ்பூன் அரிசி மாவு
  • கலர் பொடி
  • உப்பு
  • 1 லெமன்
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் காடையை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. அதோடு மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, கார்ன் பிளவர் மாவு, அரிசி மாவு, கலர் பொடி, தேவையான அளவு உப்பு, லெமன் சாறு அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
  3. பிறகு ஒரு கடையாய்யை அடுப்பில் வைத்து பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் ஊற வைத்த காடையை போட்டு இரு புறமும் திருப்பி விட்டு வேக வைத்து எடுக்கவும்.
  4. இப்பொழுது சுவையான காடை 65 ரெடி.