மணமணக்கும் பாய் வீட்டு சுவையான கல்யாண மட்டன் தாழ்ச்சா செய்வது எப்படி ?

Summary: விடுமுறை வந்தாலே நம் அனைவர்க்கும் குஷி தான் ஏனெனில் அன்று நமக்கு பிடித்தவாறு எதையும் சமைத்து சாப்பிடலாம். அதுவும் சமையலில் ஆர்வம் கொண்டவர்கள் வித்தியாசமான ரெசிபிகளை செய்வார்கள். அந்வகையில் இந்த வாரம் இந்த பாய் வீட்டு கல்யாண மட்டன் தாழ்ச்சா ரெசிபியை ஒரு முறை செய்து பாருங்கள் அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 1 கிலோ ஆட்டு, எலும்பும், கொழுப்பும்
  • 5 பெரிய வெங்காயம்
  • 5 தக்காளி
  • 2 வாழைக்காய்
  • 1 மாங்காய்
  • 4 முருகைக்காய்
  • ½ கிலோ கத்திரிக்காய்
  • 100 கிராம் துவரம் பருப்பு
  • 50 கிராம் பாசிப்பருப்பு
  • எண்ணெய்
  • உப்பு
  • கருவேப்பிலை
  • புளி
  • ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்

Equipemnts:

  • 1 குழம்பு பாத்திரம்

Steps:

  1. முதலில் பருப்புகள் இரண்டையும் கழுவி மஞ்சள் தூள் போட்டு வேகவைத்து எடுத்து வைக்கவும்.
  2. பிறகு அடுப்பில் தகுந்த பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  3. அடுத்து அதில் வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை பொடியாகவும்.வெட்டி போட்டு உப்பு சேர்த்து வதக்குங்கள்.
  4. அவை நன்கு வதங்கியதும், முதலில் கழுவி வைத்திருக்கும் ஆட்டு எலும்பு, மற்றும் கொழுப்பை சேர்த்து சிறிது நேரம் வதக்குங்கள்.
  5. அதன் பிறகு முருகைக்காய், கத்திரிக்காய், இரண்டையும் போட்டு அத்துடன் மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய் தூள், ஒரு முறை பிரட்டிவிட்டு தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும்.
  6. அதற்கு பிறகு மூடியை திறந்து வாழைக்காய், மாங்காய் துண்டுகளை போட்டு மூடி மேலும் [பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
  7. அதன் பிறகு வேகவைத்து வைத்திருக்கும் பருப்பு கலவை, கரைத்து வைத்த புளி இரண்டையும் ஊற்றி மேலும் ஒரு பத்து நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான தாழ்ச்சா ரெடி.