நாவில் எச்சி ஊறும் சுவையான ஓட்ஸ் கட்லெட் செய்வது எப்படி ?

Summary: உங்கள் குழந்தைகளுக்கு ஒரு முறை இந்த ஓட்ஸ் கட்லெட் ஸ்னாக்ஸ் செய்து கொடுங்கள் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள் அது மட்டும் அல்லாமல் இந்த ரெசிபி ஆரோக்கியமானதும் கூட, குழந்தைகள் மட்டும் அல்லாமல் பெரியவர்களும் டீ, காபி, சாப்பிடும் போது இந்த ஸ்னாக்ஸ் செய்து சாப்பிடுங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க.

Ingredients:

  • 1 கப் ஓட்ஸ்
  • 2 வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு
  • தலா ஒரு கப் காலிப்ளவர்,சுரைக்காய், பீன்ஸ், துருவிய கேரட்
  • ½ டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
  • ½ டீஸ்பூன் உலர்ந்த மாங்காய் தூள்
  • 2 டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
  • ¼ டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • உப்பு, எண்ணெய்
  • ¼ கப் பிரெட் தூள்

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் வெறும் வாணலில் ஓட்ஸை வறுத்துக்கொள்ள வேண்டும்.
  2. அதை, ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு,அதில் காலிப்ளவர், மசித்த உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், சிவப்பு மிளகாய் தூள், மாங்காய் தூள், கொத்தமல்லி, எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, சிறிதளவு எண்ணெய் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்.
  3. பிறகு நமக்கு பிடித்த வடிவில் இந்த மாவை பிடித்துக் கொண்டு, பிரெட் தூளில் பிரட்டி, தவாவில் மிதமான அளவுக்கு எண்ணெய் ஊற்றி கட்லெட்டை போட்டு இருபுறமும் பொன்னிறமாக வேகும் வரை வேகவைத்து எடுக்க வேண்டும்.
  4. இப்பொழுது சுவையான ஓட்ஸ் கட்லெட் ரெடி.