காரசாரமான சுவையில் மசாலா முட்டை புர்ஜி செய்வது எப்படி ?

Summary: வட மாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்து வருகிறது. சுவையான எக் புர்ஜி இதை எளிதாக வேகமாகவும் செய்து விடலாம். இது போன்று ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த முட்டை புர்ஜி செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 5 முட்டை
  • 2 டேபிள் ஸ்பூன் பன்னீர்/சீஸ்
  • 2 வெங்காயம்
  • தக்காளி
  • 2 பச்சைமிளகாய்
  • ½ ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • ½ டீஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு
  • 1 சிட்டிகை சாட் மசாலா
  • 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளற வேண்டும்.
  2. வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் அதில் பச்சை மிளகாய், தக்காளி, மற்றும் துருவிய பன்னீர்/சீஸை சேர்த்து 2-3 நிமிடம் வதக்கவேண்டும்.
  3. பின்னர் உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள், மற்றும் சாட் மசாலாவை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
  4. பின்பு அதில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு கிளறி, ஒரு 5 நிமிடம் முட்டை வேகும் வரை கிளறி இறக்கவும்.
  5. இப்பொழுது சுவையான மசாலா முட்டை புர்ஜி தயார் அதன் மேல் சிறிது கொத்தமல்லி இலைகளை தூவி விடவும்.