சுவையான காளன் குருமா செய்வது எப்படி ? வாருங்கள் பார்க்கலாம்...

Summary: உங்கள் வீட்டில் இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் தயாரிக்கும் பொழுது அதிகபட்சமாக சாம்பார் தயார் செய்து தான் சாப்பிடுவீர்கள் அது போக ஒரு சட்னி ஒன்று வைத்துக் கொள்ளுவீர்கள். இப்படி சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும் நீங்கள் சாம்பாருக்கு பதிலாக காளான் குருமா வைத்து சாப்பிட்டு பாருங்கள் ரூசீகரமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் அடுத்த முறையில் இதையே செய்யுங்கள் என்று விரும்பி கேட்டு சாப்பிடுவார்கள். இப்பொழுது இந்த சுவையான காளான் குருமாவை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம் வாருங்கள்.

Ingredients:

  • எண்ணெய்
  • 8 சின்னவெங்காயம்
  • ¼ கப் தேங்காய் துருவியது
  • 5 சிகப்பு வத்தல்
  • 1 TBSP சோம்பு
  • 1 TBSP சீரகம்
  • ½ TBSP மிளகு
  • 2 PIECE ஏலக்காய்
  • 1 PIECE கிராம்பு
  • 1 PIECE பட்டை
  • 5 பல் பூண்டு
  • 2 துண்டு இஞ்சி
  • 1 TBSP மல்லித்தூள்
  • கருவேப்பிலை
  • எண்ணெய்
  • கடல் பாசி
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 குக்கர்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் காளான் வாங்கும் போது பிரஷான்ன காளானாக இருக்கிறதா என்பதை பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். அதன் பின்பு காளாணை தண்ணீரில் நன்றாக அலசி எடுத்துக் கொள்ளுங்கள்.
  2. ஒரு காளாணை மூன்று துண்டுகளாக நறுக்கி அதே போல் அனைத்து காளானையும் நறுக்கி கொள்ளுங்கள். அதன் பின்பு அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள்.
  3. எண்ணெய் சூடேறும் வரை காத்திருங்கள் என்னை சூடேறியவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு, மிளகு, போன்றவற்றை சேர்த்து தாளிக்கவும். பின்பு இதனுடன் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
  4. வெங்காயம் பொன்னிறமாக வரும் வதக்கி, அதன் பின் பூண்டு, இஞ்சி, வத்தல், கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். வத்தல் வதங்கிய பின் வைத்திருக்கும் தேங்காய் துருவலையும் போட்டு பச்சை வாடை போகும் வரை வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
  5. பின்பு சிறிதளவு மஞ்சள் பொடி மற்றும் மல்லி பொடி சேர்த்து வதக்கி கொள்ளுங்கள் பின் கடாயை கீழே இறக்கி சூடு ஆறியவுடன் இந்த பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  6. குக்கரை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடேறியவுடன் கடல் பாசி, வெங்காயம், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
  7. பின் தக்காளியும் சேர்த்து வதக்கவும் தக்காளியின் பச்சை வாடை போய் மென்மையாக வந்தவுடன் காளனை சேர்த்து நன்றாக கிளறி விடவும் அதன் பின் அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள்.
  8. பின்பு குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை வைத்து எடுங்கள் ஒரு விசில் வந்ததும் குக்கரை இறக்கி வைக்கவும், பிரஷர் இறங்கும் காத்திருக்கவுமா.
  9. பின் பிரஷர் இறக்கிய பின் முடியை திறந்து வேறு பாத்திரத்தில் குருமாவை ஊற்றி விடுங்கள் பின்பு கொத்தமல்லியே சிறிதளவு தூவி விடுங்கள் இப்பொழுது காளான் குருமா இனிதே தயாராகிவிட்டது.