வாயில் வைத்த உடன் தேன் போல கரையும் தேங்காய் லட்டு செய்வது எப்படி ?

Summary: சில வீடுகளில் இனிப்பு வகைகளை வீடுகளில் தயாரிப்பார்கள் சிலர் கடைகளில் வாங்குவர். அந்த வகையில் சுலபமாகவும் ருசியாகவும் வீட்டிலே ஒரு அதகசமான ஸ்வீட் செய்யலாம், அதுவும் தேங்காய் கொண்டு இதை எப்படி செய்யலாம் என்பதை கீழே செய்முறை விளக்கங்கள் கொடுத்துளோம் அதனை படித்து பார்த்து நீங்களும் செய்து பாருங்கள்.

Ingredients:

  • 1 கப் தேங்காய் கொப்பரை தூள்
  • 1 கப் கண்டென்ஸ்ட்டு மில்க்
  • குங்குமம் பூ அல்லது மஞ்சள் நிறம் தூள்
  • ½ டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்

Steps:

  1. ஒரு வாணலியில் நெய் சேர்த்து, அதில் கொப்பரைத் தூள், ஏலக்காய் தூள், மற்றும் குங்குமப்பூ அல்லது கலர் பொடியை சேர்த்து ஒன்றாக வறுக்கவும்.
  2. சில நொடிகள் மட்டுமே வறுத்தத் தேங்காய் மீது 1 கப் கண்டென்ஸ்டு மில்க் ஊற்றி தொடர்ச்சியாகக் கிண்டவும்.
  3. தேங்காய் களவை ஒன்று சேர்ந்து வந்தவுடன் சூடு ஆறிய பிறகு, கைகளில் நெய் தடவி சிறிய உருண்டைகளாக உருட்டவும்.
  4. உருட்டிய லட்டுவை கொப்பரைத் தூளில் உருட்டி எடுத்தால் சுவையான தேங்காய் லட்டு தயார்.