மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும் யாழ்ப்பாணம் ஆட்டிறைச்சி கறி எப்படி செய்வது ?

Summary: ஒரே மாதிரியான மட்டன் ரெசிபிகளை செய்து சாப்பிடுவதற்கு பதில் ஒரு முறை இந்த யாழ்ப்பாணம் ஆட்டு இறைச்சி கறியை செய்து பாருங்கள் அவர்களுக்கும் ஒரு மாறுதலாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அரை அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு மட்டன் ரெசிபியாக இது மாறிவிடும். அதனால் இது போன்ற உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு முறை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் வகையில் இருக்கும்.

Ingredients:

  • 1 கிலோ ஆட்டிறைச்சி
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 உருளைக்கிழங்கு
  • 5 பச்சை மிளகாய்
  • 6 பற்கள் பூண்டு
  • 1 டேபிள் ஸ்பூன் கடுகு
  • 1 டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகம்
  • கருவேப்பிலை
  • எண்ணெய்
  • மிளகாய் தூள்
  • உப்பு
  • தேசிக்காய்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 குழம்பு பாத்திரம்

Steps:

  1. முதலில் ஆட்டிறைச்சியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு அதில் உப்பு, கறிமிளகாய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
  2. அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், பெருஞ்சசீரகம் ,வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக சிவந்ததும் பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு வெட்டி வைத்த வெண்டைக்காய், பச்சை மிளகாய், போன்ற்வற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. வெங்காயம் சிவந்து வதங்கி வரும்போது, கலந்து வைத்த ஆட்டிறைச்சியை சேர்த்து நன்றாக வதக்கி கலவையுடன் பிரட்டி மூடி போட்டு வேக விடவும்.
  4. இறைச்சியில் இருக்கும் தண்ணீரிலும், சட்டியில் உள்ள எண்ணெயிலும் அவிந்து பொரிய விடவும். இறைச்சி முக்கால் பதம் வெந்ததும், தேவையான அளவு மிளகாய் தூள், சேர்த்து வெட்டிய உருளை கிழங்கையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்க விடவும்.
  5. நன்றாக வெந்ததும் குறைந்த தீயில் வைத்து நீர் வற்றும் வரை பிரட்டவும். பிறகு கருவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
  6. இப்பொழுது சுவையான ஆட்டிறைச்சி தயார்.