காரசாரமான எண்ணெயில் வதக்கிய வாழைக்காய் செய்வது எப்படி ?

Summary: ஒரு முறை வாழைக்காயை இப்படி செய்து பாருங்கள் அவ்வளவு சுவையாக இருக்கும். வாழைக்காயை இப்படி வறுத்தால் மீன் வறுவலை விட ருசியாக இருக்கும். இந்த வாழைக்காய் வறுவலை தயிர் சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்றாக படித்து பார்த்து நீங்களும் செய்து பாருங்கள்.

Ingredients:

  • 2 வாழைக்காய்
  • ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 2 டீஸ்பூன் தக்காளி கெட்சப்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் உப்பு
  • 1 குளிக்கரண்டி எண்ணெய்
  • ¼ டீஸ்பூன் கடுகு
  • ¼ டீஸ்பூன் உளுத்தம் பருப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் வாழைக்காயை நன்றாக கழுவி, தோல் சீவி வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தக்காளி கெட்சப், இஞ்சி-பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்துப் பிசைந்து, அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
  3. பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து, சிவந்த பின் ஊற வைத்த வாழைக்காயை கலவையைச் சேர்த்துக் கிளறி வேகவிடவும். நன்றாக வெந்த பின் இறக்கி பறி மாறவும்.
  4. இப்பொழுது சுவையான எண்ணெய் வாழைக்காய் தயார்.